July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவுடனான மோதல் சீனாவுக்கு நல்லதல்ல’

லடாக் எல்லையில் எத்தகைய சூழலையும் சந்திக்க தயார் என இந்திய விமானப்படைத் தளபதி பஹதூரியா தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் , அதேவேளை இந்திய விமானப் படைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் விமானப்படை தளபதி கூறியுள்ளார்.

கிழக்கு லடாக் பகுதியில் பெருமளவிலான ரேடார்கள் ,ஏவுகணைகள் போன்றவற்றை சீனா குவித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவுடனான மோதல் சீனாவுக்கு நல்லதல்ல என்றும் இந்திய விமானப்படைத் தளபதி பஹதூரியா எச்சரித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சவால்களும் இந்தியாவின் வான் பலமும் என்ற கருத்தரங்கில் காணொலி வாயிலாக உரையாற்றிய விமானப் படையின் தளபதி பஹதூரியா, எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் சீனா பெருமளவு படைகளை குவித்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில் சீனா தனது படைகளை குவித்து வரும் நிலையில், எல்லையில் பதற்றம் நீடித்து வருவதை ஒட்டி இந்திய, சீன ராணுவ உயர் அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

சீனாவால் எத்தகைய அசாதாரண சூழல் ஏற்பட்டாலும் அந்த சவாலை சந்திக்க இந்திய விமானப்படை தயாராக இருப்பதாகவும் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்திய- சீன எல்லையை ஒட்டிய திபெத் படைத்தளத்தில் தரைவிட்டு தரைபாயும் ஏவுகணைகளையும்,ரேடார் கருவிகளையும் சீனா நிறுத்தியுள்ளதாக கருத்தரங்கில் விமானப்படைத்தளபதி எச்சரித்துள்ளார்.