July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவதூறு வழக்கு: ஸ்டாலின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

Photo: M.KStalin/Twitter

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முவைத்ததாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளுக்கு விளக்கமளிப்பமற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

தமிழ்நாடு அரசை விமர்சித்து உரையாற்றியிருந்தமை, கடந்த ஜூன் 5 ஆம் திகதி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து ட்விட்டரில்  சில கருத்துகளைப் பதிவிட்டமை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் முரசொலி பத்திரிகையில் கருத்துவெளியிட்டமை உள்ளிட்ட 6 அவதூறு வழக்குகளை ஸ்டாலினுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் தனித்தனியாகத் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 2ஆம் திகதி ஸ்டாலினுக்கு உத்தரவிட்டது.

ஆனால், அவதூறு வழக்குகளில் டிசம்பர் 2ஆம் திகதி முன்னிலையாகாத நிலையில் இன்றையதினம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கே. ரவி முன்னிலையில் ஸ்டாலின் முன்னிலையானார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது,

“சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல அவதூறு வழக்குகளை ரத்து செய்து அதிமுக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் இந்த அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இதுமாதிரி அவதூறு வழக்குகள் போட்டு திமுகவின் ஜனநாயக கடமையைத் தடுக்கவும் முடியாது மிரட்டவும் முடியாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சுரிமையை, எத்தனை வழக்குகள் போட்டாலும் முதலமைச்சர் பழனிசாமியால் தடுக்க முடியாது. என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளைச் சட்டரீதியாகச் சந்திப்பேன். என்றார்.

மேலும் ஆளும்கட்சியின் தவறுகளை , ஊழல்களை விமர்சிப்பது ஒரு எதிர்க்கட்சியின் முக்கியக் கடமை. அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம் அதிமுகவின் ஊழல்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அம்பலப்படுத்துவோம் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.