இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. narendramodi_in என்ற அவரின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கிற்குள், ஊடுருவியுள்ள ஹேக்கர்கள், கணக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அடுத்தடுத்து டுவிட் செய்து மோடியின் கணக்கை பின் தொடர்பவர்களிடம், க்ரிப்டோ கரன்ஸி மூலம் நன்கொடை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்டது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், கணக்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி அவரின் டுவிட்டர் கணக்கு தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.