January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ரஜினிகாந்த் ஏதேனுமொரு அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்கினால் அது அதிமுகவாகத்தான் இருக்கும்’

நடிகர் ரஜினிகாந்த் ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்கினால், அது அதிமுகவாகத்தான் இருக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்ததைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி அவரது உடல் நிலையைக் கருத்திற்கொண்டு முடிவெடுத்திருப்பதன் காரணமாக அதிமுக சார்பில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.