January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

அதிக வீரியம் கொண்ட புது வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 6 பேர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்திருந்தவர்களுக்கே இவ்வாறு அந்த வைரஸ் தொற்று உறுதியானதாக இந்திய மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் யார் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் கனடா, ஜப்பான், லெபனான்,டென்மார்க், ஸ்வீடன், நைஜீரியா, சிங்கப்பூர், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.