இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறி கர்நாடகா சென்றுள்ள 150 பேரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் வீரியம்மிக்க கொரோனா பரவத்தொடங்கிய பின்னர் 150 பேர் கர்நாடகாவிற்கு திரும்பியுள்ளனர். அவர்கள் யார்?, எதற்காக வந்தார்கள்? எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா திரும்பிய 150 பேரின் பட்டியலை வைத்து அவர்களை தேடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இங்கிலாந்திலிருந்து தமிழகம் திரும்பிய 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவர்களுடன் தொடர்பிலிருந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இங்கிலாந்தில் பரவும் புதியவகை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை மத்திய அரசே அறிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.