February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் கரீமா பேகம் காலமானார்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் கரீமா பேகம் இன்று காலமாகியுள்ளார்.

நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று சென்னையில் காலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் கரீமா பேகம் காலமானதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்டர் செய்தியொன்றில் தாயின் படத்தைப் பதிவேற்றி, உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேநேரம், திரையுலகின் பிரபலங்கள் பலரும் ‘இவ்வாறானதொரு மகனை உலகுக்களித்த உங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என தமது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் சிறு வயதிலேயே தந்தையை இழந்த நிலையில், இசைத் துறையில் உச்சம் தொட தாய் பெரிதும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.