January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் 19 – இரண்டாம் இடத்தில் இந்தியா!

உலகில் கொரோனாத் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்துக்கு இந்தியா முந்தியுள்ளது.

நேற்றிரவு மட்டும் பதிவான 90,802 புதிய நோயாளர்களுடன் சேர்த்து இந்தியாவில் மொத்தமாக 4,204,613 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் 13 நாட்களிலேயே இந்தியாவில் நோயாளர்களின் எண்ணிக்கை 3 மில்லியனிலிருந்து 4 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை உயர்வுக்கு பிரேசிலுக்கு 25 நாட்கள் எடுத்தன, அமெரிக்காவுக்கு 16 நாட்கள் எடுத்தன.

உலகிலேயே அதிக தொற்று வீதம் உள்ள நாடாக இந்தியாவே உள்ளது.

ஆனால், இந்தியாவில் உயிரிழப்பு வீதம் 1.7 வீதமாகவே உள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான வீதம் இதுதான். இதுவரையில் அங்கு 70 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.