ஹைதராபாத் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், டிஸ்சார்ஜ் ஆகி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
இந்நிலையில் இரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்’ எனத் தெரிவித்திருந்ததுடன் பரிசோதனைகளில் அவருக்கு கவலைப்படும் எவ்வித பிரச்சினைகள் இல்லையென்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை ரஜினிகாந்தின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஒருவாரம் ஓய்வெடுக்கவேண்டும் எனவும், இரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும், மன அழுத்தமின்றி இலகுவான பணிகளை மட்டுமே மேற்கொள்ளவேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் சென்னை திரும்பவுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த ரஜினிகாந்த், காரில் இருந்தவாறு ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.