July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை

டெல்லியில் கடந்த 31 நாட்களுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.

இருப்பினும் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி,விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன என்று கூறியிருந்தார்.

இதேநேரத்தில் ராகுல் காந்தி, 2 கோடி பேர் கையெழுத்திட்ட,விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான, விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற, மனுவை குடியரசுத் தலைவரிடம் அளித்திருந்தார்.

மேலும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார். மேலும் விவசாய சட்டங்களை திரும்பப் பெறப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

விவசாயிகளும் மத்திய அரசு, தாங்கள் பேச்சுவார்த்தைக்கு வராததை போன்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகின்றன என்று குற்றச்சாட்டை முன் வைத்தார்கள்.

இந்நிலையில் வரும் 29-ஆம் திங்க்தி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராக இருப்பதாகவும்,குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக உறுதி செய்தல், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல் ஆகிய இரண்டு அம்சங்களின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன.