November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவுடன் சமாதான சண்டை; சீனாவின் புது தந்திரம்

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

சீனா இந்தியாவின் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, ஆக்கிரமிப்பு செய்த பாேது அதை இந்தியப் படைகள் முறியடித்தனர். இருப்பினும் சீனா விட்டுக்கொடுக்காமல், சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம், ஊடுருவ தயார் நிலையிலேயே உள்ளது.

இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், இந்தியா தன்னுடைய பகுதியான லடாக்கில், எல்லைகளை நோக்கி படைகளை விரைந்து அனுப்பும் விதமாக பாதை அமைப்பது மற்றும் எல்லைப் பகுதிகளில் ரோந்து போவதும்,சீனாவிற்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே சீனாவின் ஊடுருவலுக்கு முக்கிய காரணம்.

சீனாவின் ஊடுருவலைத் தொடர்ந்து, லடாக் எல்லைக்கோடு பகுதியில், இந்தியாவும் தனது படைகளை குவித்து இருக்கிறது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கலாம் என்ற நிலையில், இந்தப் பிரச்சினையை சரி செய்ய,இரு நாடுகளுக்கு இடையில், இதுவரை கமாண்டர்கள் மட்டத்தில் 8 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஏனெனில் சீனா தந்திரமாக இந்தியாவின் பகுதிகளிலிருந்து அதனை பின்வாங்கச் சொல்லுகிறது.

தன் பகுதியில் இருந்தே,தன்னுடைய துருப்புகளை பின்வாங்கச் செய்ய, சீனா போடும் தந்திரத்தை இந்தியா மிகக் கடுமையாக எதிர்க்கிறது.

மேலும் படைகளை இந்திய பகுதிகளிலிருந்து வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

எல்லையில் இரு தரப்பிலும் சேர்த்து குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு மேல் இருப்பார்கள், ஏதாவது ஒரு சிறு சம்பவம் நடைபெற்றாலும் கூட இது மிகப் பெரிய போராக மாறலாம். ஆகையால் சீனா தன் நிலையை உணர்ந்து ஊடுருவலுக்கு முன்னிருந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் ஒரே முடிவு.