மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் திமுக மத்திய அமைச்சருமான மு .க. அழகிரி மதுரையில் இருந்து சென்னையில் உள்ள கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்திருந்தார்.
அவரின் வருகை அரசியல் வட்டாரத்தில் அதிலும் குறிப்பாக திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் சமீபகாலமாக அவர் பா.ஜ.க.வில் சேரப் போகிறார் என்று ஒரு தகவலும், தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று ஒரு தகவலும் உலா வந்த வண்ணம் இருக்கிறது
இந்நிலையில் வீட்டிலிருந்து புறப்படும் சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜனவரி 3ஆம் திகதி தன்னுடைய ஆதரவாளர் உடன் பேச இருப்பதாகவும் தன்னுடைய தொண்டர்கள் விரும்பினால் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்றும் கூறினார்.
மேலும் திமுகாவுடனோ ,ஸ்டாலினுடனோ இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
ஒருவேளை இவர் தனிக் கட்சி ஆரம்பித்தால் அது திமுகவின் வாக்கு வங்கியை கண்டிப்பாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.