
தேர்தலில் எதிரிகளை மீண்டும் ஓடச்செய்து மூன்றாவது முறையாக ஆட்சியமைப்போம் என அதிமுகவின் தலைவர்கள் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துள்ளனர்.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவுதினமான இன்று அதிமுகவினர் அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். செய்த சாதனையை போல அவருடைய விசுவாச தொண்டர்களாகிய நாம் மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைப்போம் என அதிமுகவின் தலைவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆசி நமக்கு இருக்கிறது. அம்மா அவர்களின் ஆன்மா நமக்கு துணை நிற்கிறது. என்றும் வெற்றி எதிலும் வெற்றி என்று முழங்கிடுவோம். அதற்காகவே உழைத்திடுவோம் என அதிமுகவின் தலைவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
இருள் இல்லாத தமிழ்நாடு; பசி இல்லாத தமிழ்நாடு; புரட்சி தலைவர் பாரத் ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி; தொடர்ந்து புரட்சி தலைவி அம்மாவின் நல்லாட்சி; விசுவாசத் தொண்டர்களின் நேர்மையான ஆட்சி; மக்கள்தான் எஜமானர்கள் என்று நினைக்கும் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர ஒற்றுமையுடன் பாடுபடுவோம். உளமாற பாடுபடுவோம். நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு பாடுபடுவோம் ன அதிமுகவின் தலைவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்