April 30, 2025 14:04:44

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலாவுடன் கைதான சுதாகரன் நாளை விடுதலையாகின்றார்?

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் கைதுசெய்யப்பட்ட அவரது உறவினரான சுதாகரன் நாளை விடுதலையாகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்து வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய சுதாகரனின் மனுவை, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்றது.

ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி சுதாகரன் மனு அளித்து இருந்தார். இதையடுத்து நீதிமன்றம் சுதாகரனை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி சுதாகரன் தனது வழக்கறிஞர்கள் மூலம் சிறைத்துறைக்கும் உள் துறைக்கும் மனு அனுப்பினர். இந்த மனுவுக்கு பதில் அனுப்பி உள்ளது. இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக அபராதம் கட்டப்பட்ட விவரம் சிறைத்துறைக்கு தெரிவிக்கப்படும்.

இந்த நடைமுறைகள் நடைபெற இன்று இரவு வரை ஆகலாம் என்று கருதப்படுகிறது. தகவல் கிடைத்ததும் சுதாகரன் நாளை விடுதலை செய்யப்படலாம் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.