January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா சட்டங்களை மீறியதற்காகக் கைதுசெய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிணை

கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மும்பையில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மும்பை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சோதனையின் போதே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தின் பின்னரும் குறித்த களியாட்ட விடுதி திறந்திருந்ததாகவும், அங்கு சுகாதார வழிகாட்டல்கள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பொலிஸ் சோதனைகளின் போது, பாடகர் குரு ரந்தவா உட்பட 34 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சட்டத்தின் 188 ஆம் பிரிவான ‘அரச அதிகாரிகளின் உத்தரவுக்குக் கட்டுப்படாமை’ மற்றும் 34, 269 ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.