திமுகவின் வெற்றியை தடுப்பதற்கு கட்டாயப்படுத்தி கட்சிகள் தொடங்கப்படுகின்றன என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில், மிஷன் 200 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, வரும் புதன் கிழமையிலிருந்து இதை செயல்படுத்தும்படி ஸ்டாலின் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்குமான ஓட்டு வித்தியாசம் ஒரு சதவீதம் மட்டுமே. ஆகவே அனைத்து தொகுதிகளிலும் கலைஞரே நிற்பதாக முடிவு செய்து, கூட்டணியில் எந்த கட்சி வந்தாலும், கடுமையாக உழைத்து 234 சீட்டுகளை கண்டிப்பாக ஜெயித்தே ஆகவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவின் ஒரு அமைச்சர் கூட வெற்றி பெற்று விடக்கூடாது எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரம் ,பண பலத்தை எதிர்த்து, மக்களின் மனங்களை வென்று வாக்குகளை பெற வேண்டும் எனவும் ,இந்த முறை ஆட்சி அமைப்பதே கடந்த 5 முறை ஆட்சி அமைத்ததற்கு சமம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்படி வரும் 23 ஆம் திகதியிலிருந்து பத்தாம் திகதி வரை தமிழ்நாடு முழுவதும் 16,000 கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இப்படியான மக்கள் சந்திப்பு திட்டங்கள் கட்சியின் முந்தைய சாதனைகள்,தொண்டர்களின் கடுமையான உழைப்பு இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து குறைந்தபட்சம் 200 சீட்டுகளை வென்றுவிட வேண்டும் என்பதே திமுகவின் இந்த மிஷன் 200 திட்டமாக இருக்கிறது.