புதுடில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்கள் போராட்டம் குறித்து வெளியாகும் போலி செய்திகளை கட்டுப்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்ப பிரிவொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவில் போராடும் விவசாயிகளின் போராட்டம் குறித்து போலியான செய்திகளை பரப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக விவசாயிகளின் போராட்டம் குறித்த உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்களில் விவசாயிகளின் போராட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலம் மக்கள் மத்தியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான உணர்வுகளை தூண்டுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக பாஜக பெருமளவு பணத்தை செலவிடுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையிலேயே தங்கள் போராட்டம் குறித்து உண்மையான தகவல்களை வெளியிடுவதற்காக விவசாயிகள் தகவல் தொழில்நுட்ப பிரிவை ஆரம்பித்துள்ளனர்.