January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்’: இந்தியா எச்சரிக்கை

இந்திய எல்லையில் சீனா நடத்தும் அத்துமீறலை பொறுத்துக்கொள்ள முடியாது என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே துண்டிகலில் உள்ள இந்திய விமானப்படை அகடமியின் தளத்தில் நடைபெற்ற கூட்டு அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலங்களில் கூட இந்திய எல்லையில் சீனா அத்துமீறியுள்ளதாகவும், அந்நாட்டின் நடத்தை மிக மோசமான நோக்கங்களைக் கொண்டிருப்பதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில் லடாக் எல்லையில் அத்துமீறிய சீனாவுக்கு இந்தியா கொடுத்த கடுமையான பதிலடிக்கு பல்வேறு நாடுகளும் பாராட்டுத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய- சீன எல்லைப் பகுதியில் நடைபெறும் எந்த விதமான அத்துமீறல்களுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.