Photo: Edappadi Palaniswami/Twiiter
முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர், பல்வேறு தடைகளைத் தாண்டி 4 ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்கள் தமது பிரசார பயணத்தை தொடங்கியுள்ளன.
முதலமைச்சர் தனது சொந்தத் தொகுதியான சேலம் மாவட்டம், எடப்பாடியில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் தெரிவிக்கையில்,
நான் ஒரு போதும் முதல்வராவேன் என்று நினைக்கவில்லை. முதல்வர் பதவி எனக்கு இறைவனால் கிடைத்தது என்றார். இந்தியாவிலேயே கல்வி தரத்தில் தமிழகம் தலைசிறந்து விளங்குகின்றது.
தனது ஆட்சியில் புயல், கொரோனா போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளதையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
எடப்பாடி தொகுதி என்பது அதிமுகவின் எஃகு கோட்டை, 43 ஆண்டு கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சரின் தொகுதி என்ற பெருமை எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. இந்தியாவிலேயே உபரி மின்சாரம் தயாரிக்கிற மாநிலம் தமிழகம் எனவும், நீர்மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது சொந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து அனைத்து அமைச்சர்களும், கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆளும் அதிமுக, பிரசார திட்டத்தை வெளியிடாத நிலையில், முன்கூட்டியே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்தை தொடங்கியுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.