June 13, 2025 7:36:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிமுகவின் தேர்தல் பிரசாரம் நாளை ஆரம்பம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆரம்பிக்கவுள்ளார்.

2021 மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிற்கான பிரசாரத்தை அதிமுக சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.

தமிழக முதல்வர் தேர்தல் பிரசார கூட்டங்களை எடப்பாடியில் உள்ள பெரியசோரகை கரியபெருமாள் கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு ஆரம்பிப்பது வழக்கம்.

நாளையும் அவ்வாறே அந்த ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு எடப்பாடி பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

இதில் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள், தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொள்ளவுள்ளனர்.