
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெய்.
“சென்னை 28”, “சுப்ரமண்யபுரம்” உள்ளிட்ட பல ஹிட்டான படங்களை கொடுத்த ஜெய்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தற்போது இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு வில்லனாக ஜெய் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் ஜெய் தற்போது முதல்முறையாக வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளார்.
சுந்தர். சி தயாரிப்பில், பத்ரி இயக்கத்தில் உருவான ‘நாங்க ரொம்ப பிஸி’ படம் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டு கடந்த மாதம் தீபாவளி அன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது.
இந்நிலையில் தனது அடுத்த பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுந்தர் சி. தானே இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்பட இயக்குனர் பத்ரி தான் இந்தப் படத்தையும் இயக்கவுள்ளார். வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே சுந்தர். சி இயக்கத்தில் “கலகலப்பு 2” படத்தில் நடித்திருக்கிறார் ஜெய். வழக்கமாக படங்களில் கதாநாயகனாக நடித்துவரும் ஜெய் முதல் முறையாக வில்லனாக களம் இறங்கியிருப்பது ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தில் ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரத்திற்கு தான் மிகவும் முக்கியத்துவம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் ஜெய்.
ஆகவே இவ்வளவு காலமும் திரையில் ஒரு கதாநாயகனாக பார்த்து வந்த ஜெய்யை, இம்முறை மாறுபட்ட வேடத்தில் ஒரு வில்லனாக தமிழ் சினிமாவில் பார்க்க இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.