January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்சி சின்னம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுமை காக்க வேண்டும்; ரஜினி மக்கள் மன்றம்

நடிகர் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர் சின்னம் குறித்து உத்தியோகபூர்வ  அறிவிப்பு வெளியாகும்வரை ரசிர்கள் பொறுமை காக்கவேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும் சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என பெயரிடப்படவுள்ளதாகவும், இந்தக கட்சிக்கு முச்சக்கரவண்டி சின்னம் ஒதுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினிகாந் அரசியலுக்கு வருவது உறுதி என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புதிய கட்சியின் பெயர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
அவரின் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் முச்சக்கர வண்டி சின்னத்தை தேர்தல் ஆணையகம் ஒதுக்கியுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சிக்கு ரஜினி என்ன பெயர் வைக்கப் போகிறார் கட்சிக் கொடியின் நிறம் என்ன அதில் இடம்பெறும் சின்னம் என்ன என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்தது.