January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார் பிரிட்டன் பிரதமர்…

இந்தியாவின் 62வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில்  நடைபெற உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

டெல்லியில்  செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப்பும் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.

குடியரசு தின விழாவில் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதன் மூலமாக இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடங்கும் என  ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பேசிய பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ,குடியரசு தின விழாவிற்கு இந்தியா அழைப்பு விடுத்ததன் மூலமாக தங்களது நாட்டை  கெளரவப்படுத்தியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரிட்டன் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.