January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களுக்கு நன்மை என்றால் ரஜினியுடன் கூட்டணி- கமல்ஹாசன்

“சீரமைப்போம் தமிழகத்தை ” என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தென் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக கோவில்பட்டியில் இன்று அவர் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு “அதிமுகவின் நீட்சி நான் என்று கூறவில்லை, எம்ஜிஆரின் நீட்சி என்று தான் கூறினேன்.

ஏனெனில் எம்ஜிஆர் திமுகவில் இருக்கும்போது திமுகவின் திலகம் என்றோ,அதிமுகவில் இருக்கும்போது அதிமுகவின் திலகம் என்றோ அழைக்கப்படவில்லை. மக்கள் திலகம் என்றே அழைக்கப்பட்டார்” என்று கூறினார்.

அதேபோல ரஜினி பற்றிய கேள்விக்கு “எங்கள் இடையே நல்ல நட்பு இருக்கிறது. ரஜினி அவருடைய கொள்கையை கூறட்டும், அது மக்களுக்கு நன்மை பயக்குமானால், எந்த ஈகோவும் இல்லாமல், ரஜினியுடன் ஒன்றிணைந்து செயல்படுவேன்” என்று கூறியுள்ளார்.