January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்- மறைமுக ஆதரவு அளிக்கும் மத்திய அரசு- சீமான் குற்றச்சாட்டு

ராமேஸ்வரம்,பாம்பன்,தங்கச்சிமடம் மீனவர்கள் 29 பேரை உடனடியாக விடுதலை செய்து, அவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளையும் வலைகளையும் திருப்பி அளிக்க வேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருக்கிறது.
தமிழக மீனவர்களின் பல கோடி மதிப்பிலான  படகுகளும் வலைகளும் இலங்கை அரசிடம் இருக்கிறது.

இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களையும், மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக, வேண்டுமென்றே பிடித்து நிர்வாணப்படுத்தி அடிப்பது, அவர்களின் வலைகளை அறுத்து எறிவது, படகுகளை கைப்பற்றுவது என கோரத்தாண்டவம் ஆடும் சிங்கள பேரினவாத ராணுவத்தின் செயல்களை தட்டிக் கேட்காமல் கள்ள மௌனம் சாதிக்கும் மத்திய அரசே, இதற்கு காரணம், என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் இதைப் போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கும் படியும், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சீமான் குரல் எழுப்பியுள்ளார்.