இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களின் தாக்குதல் திறனை அதிகரிப்பதற்காக 38 பிரஹ்மோஸ் குரூஸ் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கான யோசனையை முன்வைத்துள்ளது.
450 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணையை கொள்வனவு செய்வதற்கான யோசனையை இந்திய கடற்படை முன்வைத்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் தற்போது இந்திய கடற்படை தயாரித்துவரும் யுத்தக்கப்பல்களில் இந்த ஏவுகணையை பொருத்தலாம் என இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கப்பல்களை இந்திய கடற்படை தனது போர்க்கப்பல்களுடன் இணைக்கவுள்ளது.
38 பிரஹ்மோஸ் ஏவுகணைகளை (1800கோடி) கொள்வனவு செய்வதற்கான திட்டமொன்று இந்திய பாதுகாப்பு அமைச்சிடம் காணப்படுகின்றது. இதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படலாம் என மத்திய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய தனது திறனை வெளிப்படுத்துவதற்காக இந்திய கடற்படை தனது ஐ.என்.எஸ் சென்னை யுத்தக்கப்பல்களில் இருந்து ஏற்கனவே பிரஹ்மோஸ் ஏவுகணையை சோதனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு உள்நாட்டில் உருவாக்கியுள்ள இந்த ஏவுகணையை வெளிநாடுகளிற்கு விற்பனை செய்வதற்கான முயற்சிகளிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.
1990 களில் இந்தியாவும் ரஸ்யாவும் இணைந்து தயாரித்த இந்த ஏவுகணை இந்திய படையினரின் முக்கிய ஆயுதமாக மாறியுள்ளது.