October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அகில இந்திய வானொலி, ஆகாசவாணி ஆவதை தடுக்க வேண்டும்;தமிமுன் அன்சாரி வேண்டுகோள்

வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் நாடு முழுவதும் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையங்களிலிருந்து நேரடி ஒலிபரப்பு  நிறுத்தப்படுகிறது. இதற்குப் பதிலாக மாநிலத்தின் ஏதாவது ஒரு இடத்திலிருந்து மட்டும் ஒலிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு எஃப் எம் எனப்படும் பண்பலைகளுக்கும் பொருந்தும்.

இதுநாள் வரை அறிவித்த “ஆல் இந்திய ரேடியோ” என்றும் “அகில இந்திய ஒளிபரப்பு, சென்னை வானொலி நிலையம்” என்றோ, இனி வராது ஆகாசவாணி தமிழ்நாடு என்று மட்டுமே வரும்.

இதனால் சென்னை, புதுச்சேரி, காரைக்கால், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆகிய ஊர்களில் இருந்து ஒலிபரப்பப்படும் நேரலை இனிமேல் கிடையாது.

இந்த நிலையங்கள் நிகழ்ச்சியை தொகுத்து சென்னை நிலையத்துக்கு தரும். இதே நிலை தான் பண்பலை எனப்படும் FM க்கும் பொருந்தும்.

இத்தகைய செயலால் வட்டார மொழி வழக்குகள், அந்தந்த ஊர்களின் தனித்தன்மை, அந்த நிலையங்களின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சி வழங்குபவர்கள் என எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.

இதன் மூலம் அந்தந்த வானொலி நிலையத்தின்  தனித்தன்மையும் அழிக்கப்படும். ஆகாசவாணி என்று இந்தித் திணிப்பு முன்னிலைப்படுத்தப்படும்.

இது ஒரே நாடு, ஒரு வானொலி திட்டத்தின் கீழ் கொண்டு வந்து மாநிலத்தின் தனித்தன்மையை அழிப்பதோடு, எதிர்காலத்தில் தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

இது தடுக்கப்பட வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, என்ற வரிசையில் வானொலியும் சேர்ந்து விட்டதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.