April 29, 2025 13:26:04

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு சோனியாவும் மன்மோகனுமே காரணம்”: முகர்ஜியின் புத்தகத்தில் தகவல்

காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் தான் காரணம் என்று மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள ‘த பிரஸிடெண்ஷியல் இயர்ஸ்’  எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரணாப் முகர்ஜி  எழுதியுள்ள தனது சுயசரிதை புத்தகமான ‘த பிரஸிடெண்ஷியல் இயர்ஸ்’ அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

தனது ஜனாதிபதி பதவிக்காலத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அவர் அந்தப் புத்தகத்தில் எழுதி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் அந்தக் கட்சியை வழிநடத்த முடியவில்லை என்ற கருத்து அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று கட்சித் தலைமை மற்றும் கூட்டணியின் நெருக்கடியில் மன்மோகன் சிங் சிக்கியிருந்ததாகவும் முகர்ஜி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை தனித்துவமான திறன்மிக்கவர் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் தனது சுயசரிதை புத்தகத்தில் பாராட்டி எழுதியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில கருத்துக்கள் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.