‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தொனிப் பொருளில் நடிகர் கமல்ஹாசன் மதுரையில் பிரசார பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நான்கு நாள் பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கி, நான்கு நாட்கள் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்ய இருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.
பிரசாரத்தின் போது பத்திரிகையாளர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.அதில் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணி அமையுமா? ஆன்மீக அரசியலுடன் நீதி மய்யம் அதாவது ரஜினிகாந்துடன் இணைந்து செயல்படுவீர்களா? என்று எழுப்பிய கேள்விகளுக்கு எதுவும் நடக்கும் என்று பதிலளித்துள்ளார் கமல்ஹாசன்.
மேலும் அவர் டுவிட்டரில் பகிர்ந்த ஒரு தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில் ” சீனப் பெருஞ்சுவரை கட்டும்போது ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். ஆனால் மன்னர்களோ மக்களைக் காப்பதற்கு தான் சுவர் என்றார்கள். அதேபோல கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினியில் கிடக்க ,ஆயிரம் கோடியில் பாராளுமன்ற கட்டிடம் கட்டுவது யாரைக் காக்க” என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த செய்தி தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே….
(2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) December 13, 2020
மேலும் மதுரையில் மக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், எம்ஜிஆரின் கனவை நான் நிறைவேற்றிக் காட்டுவேன் சூளுரைத்துள்ளார்.
காந்தி மற்றும் பெரியார் ஆகியோர் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை எனக் கூறியுள்ள அவர், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனை மீண்டும் தனியாரிடமே கொடுக்கப்படும் என பேசியுள்ளார்.