January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல் பரப்புரையில் விஜயகாந்த் ஈடுபடுவார்; பிரேமலதா விஜயகாந்த்

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டத்தில் பேசிய கட்சியின் பொருளாளர் பிரேமலதா, அடுத்த வருடம் மார்ச் அல்லது எப்ரல் மாதத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என கூறியுள்ளார்.

விஜயகாந்த் பரப்புரைக்கு வருவாரா இல்லையா என்ற கேள்வி கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தற்போது இந்தத் தகவலால் தேமுதிகவினர் மற்றும் நடிகர் விஜயகாந்தின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இன்று முதல் தேர்தல் பணி தொடங்கியுள்ளதாகவும் ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் யாருடன் கூட்டணி என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் இந்த தேர்தலானது தமிழகத்துக்கு மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.