காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3200 முறை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 30 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் பகுதியில் சிறிய ரக பீரங்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கு இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.