photo:facebook/Narendra Modi
‘தாய்மொழியும் தாய்நாடும் இரு கண்கள்’ என நினைத்தவர் பாரதியார் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சர்வதேச பாரதி விழா இன்று இடம்பெற்றது.
காணொளி மூலம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் கலந்துகொண்டார்.
பாரதியார் விழாவில் கலந்துகொண்டமைக்காக நான் பெருமைப்படுகின்றேன்.பாராதியார் யார் என்று கேட்டால் அவரை அவ்வளவு எளிதாக கூறிவிடமுடியாது,அவர் பன்முக திறமைகளை கொண்டவர் என மோடி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மோடி தாய்மொழியும் தாய்நாடும் இரு கண்கள் என நினைத்தவர் பாரதியார் என தெரிவித்தார்.
பாரதியின் எழுச்சியை இன்றைய இந்தியாவில் நான் பார்க்கின்றேன்,”ஜகத்தில் உள்ளவர்கள் எதிர்த்த போதிலும் அச்சமில்லை” என்றவர் பாரதியார் என குறிப்பிட்டுள்ளார்.
துணிச்சலாக செயற்பட்டவர் மகாகவி பாரதி, பழைமை மற்றும் புதுமை இணைந்த இந்தியாவை உருவாக்க அவர் நினைத்தார் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.
தாய்நாடும் தமிழ்மொழியும் இரு கண்கள் என நினைத்தவர் மகாகவி.
பாரதி அவர் பெண்களின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து அது பற்றி பேசினார்,பெண்கள் வலிமை பெறவேண்டும் ஆண்களிற்கு நிகராக உயரவேண்டும் என நினைத்தார்.
பாரதியாரின் நூல்களை இந்தியா முழுவதும் வாசிக்கவேண்டும் என மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
Addressing the International Bharati Festival. https://t.co/paQYLDcj7k
— Narendra Modi (@narendramodi) December 11, 2020