இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 க்கும் மேற்பட்டோர் திடீரென மயங்கி விழுந்தும்,வலிப்பு ஏற்பட்டும்,பலர் உடல் ரீதியான உபாதைகளுக்கு ஆளாகினர்.
இதில் ஏலூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 370 பேர் நலமாகி வீடு திரும்பியுள்ளனர். அதில் 20 க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த திடீர் நோய்த் தாக்குதலை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குறித்த ஏலூர் பகுதிக்கு விரைந்து அங்கு சுற்றியுள்ள 30 கிராமங்களில் இருந்து தண்ணீர் மாதிரி,பால் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்துள்ளனர்.
இதில் குடிநீரிலும் ,பாலிலும் ஈயம் பாேன்ற ரசாயனக் கலவை கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இவ்வாறான ஒரு அச்சம் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டது யார் என முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
முன்னதாக இது தொற்று நோயாக இருக்குமோ என பயந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக பரிசாேதனை செய்தனர். அதில் தொற்றுநோய் இல்லை என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தண்ணீர் மற்றும் பாலில் நடத்தப்பட்ட ஆய்வில் ஈயம் பாேன்ற ரசாயனம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இறுதியாக இது கொராேனா போன்ற தொற்று நாேயாக இருக்குமா என பயந்த நிலையில் , ஆய்வு முடிவுகள் சற்று ஆறுதல் அளித்துள்ளது.