November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்வேறு பரிமாணங்களில் ஜொலித்த சின்னத்திரை சித்ரா

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் முல்லையாக வலம் வந்த சித்து என செல்லமாக அழைக்கப்படும் சித்ராவின் திடீர் மறைவு, அவரது ரசிகர்களை  கதிகலங்க வைத்துள்ளது.

1992ஆம் ஆண்டு  மே மாதம் 2ஆம் திகதி பிறந்த சித்ரா, நடிப்பு  நடனம் பேச்சு என பல்வேறு பரிமாணங்களில் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்தவர்.

பிஎஸ்சி இளங்கலைப் பட்டத்தை சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியிலும், எம்.எஸ்.சி உளவியல் படிப்பை சென்னை எஸ்ஐடி கல்லூரியிலும் படித்த சித்ரா, மக்கள் தொலைக்காட்சியில் முதன் முதலாக விஜே ஆக அறிமுகமாகினார்.

பின்னர்  ஜெயா டீவி, சன் டீவி,விஜய் டீவி , ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய   தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக வலம் வந்தார் சித்து.

இவர்  தொகுத்து வழங்கிய பத்து நிமிடக் கதைகள், ஷாப்பிங் ஜோன்,சட்டம் சொல்வது என்ன, நண்பேன்டா, ஊர் சுத்தலாம் வாங்க, நொடிக்கு நொடி அதிரடி, என் சமையலறையில், விளையாடு வாகை சூடு போன்ற நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.

மாடலிங் செய்வதில் ஆர்வம் மிக்க இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் முதன் முதலில் சீரியல் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமாகியது ஜெயா டீவியில் ஒளிபரப்பாகிய  மன்னன் மகள் என்னும் சீரியலில் தான்.

தொடர்ந்து அடுக்கடுக்காக சன் டீவியின் சின்ன பாப்பா பெரிய பாப்பா,விஜய் டீவியின் சரவணன் மீனாட்சி சீசன் 2 சீசன்-3, ஜீ தமிழில் டார்லிங் டார்லிங்,கலர்ஸ் தமிழில் வேலுநாச்சி ஆகிய மெகா தொடர்களில் நடித்திருக்கிறார் சித்ரா.

கடைசியாக இவர் நடித்து வந்த  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அவர் முல்லை எனும் பாத்திரத்தில்  நடித்துள்ளார்.

முல்லை எனும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சித்ராவின் திடீர் மரணம் அவரது சக துறை சார்ந்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாகவே உள்ளது.