February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் சரத் குமாருக்கு கொரோனாத் தொற்று

நடிகர் சரத் குமார் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

அவருக்கு ஹைதராபாத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று சரத் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவரது மனைவி ராதிகா டுவிட்டர் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், நோய் அறிகுறிகள் எதுவும் வெளிப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

சரத் குமாரின் மனைவி, நடிகை ராதிகாவின் டுவிட்டர் பதிவில், ‘இன்று ஹைதராபாத்தில் சரத் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு நோய் அறிகுறிகள் காட்டவில்லை. அவர் சிறந்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல் நலம் குறித்த தகவல்களை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.