January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஊழல் புத்திரர்கள்’ என அதிமுக, திமுகவுக்கு எதிராக கமல்ஹாசன் கொந்தளிப்பு…

தன் வாழ்க்கையே தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்கு தான் நான் ‘பி’ டீம், ஆறு வயதில் இருந்தே நான் ‘ஏ’ டீம் என்பதை ‘ஏ1’ ஊழல் புத்திரர்களுக்கு உரைக்கும் படி சொல்கிறேன் என மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை ‘சங்கி’, ‘பீ’ டீம் என இகழ்ந்து பேசிய அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சியினருக்கு கமல்ஹாசன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“அறத்தின் பக்கம் நிற்பவனை பார்த்து சங்கி, ‘பீ’ டீம் என்கிறவர்களின்  நோக்கம் ஊழலை போற்றுவது” “வாழ்நாள் முழுக்க தமிழகத்தை சுரண்டித் தின்பவர்கள்,ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சரியம் இல்லை, தீகாரையும், பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?” என கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா  மீது ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில்,அவரை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் சூரப்பாவுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.
கமல் பேசிய வீடியோவின்  எதிரொலியாகவே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு அமைப்புகளும் கமல்ஹாசனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்துள்ளன. இதற்கு பதிலளிக்கும்  விதமாகவே கமல்ஹாசன் கொந்தளிப்புடன் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.