தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினரிடையே குழாயடிச் சண்டை போன்று ஆளுக்காள் கடுமையான வார்தைகளை பிரயோகித்து சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
‘அறிக்கை நாயகன்’ என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பட்டத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஊழல் நாயகன், கமிசன் நாயகன், கரெப்சன் நாயகன் எனும் பட்டத்தை முதலமைச்சருக்கு வழங்குகிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் எனவும் ரஜினி கட்சி தொடங்கிய பிறகு பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழருவி மணியனை தவறாக சேர்த்துக் கொண்டோமோ என்று ரஜினி யோசிப்பதாக தனக்கு தகவல் வந்துள்ளதாகவும் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து கொள்கைகளை அறிவித்த பிறகு அதைப் பற்றி பேசலாம் எனவும் கூறியுள்ளார்..
விருதுநகரில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மு.க ஸ்டாலினை ஒருமையில் சாடியதாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பஃபூன் என்று விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.