January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நடிகர் விஜய்யின் இலங்கையில் உள்ள சொத்துக்கள் பறிமுதல்’ என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது

நடிகர் விஜய்யின் இலங்கையில் இருந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் இலங்கையில் உள்ள 15 வருடங்கள் பழமையான, அதிக மதிப்புள்ள சொத்துக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

நடிகர் விஜய், அவரது மனைவியின் பெயரில் அதிக சொத்துக்களை வாங்கியதாகவும், தற்போது அந்த சொத்துக்களுக்கு இலங்கையின் சில முதலாளிகள் உரிமை கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நடிகர் விஜய் குறிப்பிடுகையில், ‘இந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் அதில் எவ்வித உண்மையும் இல்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், விஜய் 1999 ஆம் ஆண்டு லண்டனில் குடியேறிய இலங்கைத் தமிழ்ப் பெண் சங்கீதாவை திருமணம் செய்ததுடன், சங்கீதாவின் தந்தை லண்டனில் பிரபல தொழிலதிபர் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.