July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்க அமெரிக்காவில் தயாராகும் ரோமியோ ஹெலிகொப்டர்

(Twitter/@LMIndiaNews)

இந்திய கடற்படைக்கு மொத்தம் 24 ஹெலிகொப்டர்களை 18 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க அமெரிக்காவுடன் 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் இந்திய கடற்படைக்காக தயாரித்து வரும் MH60 ரோமியோ ஹெலிகொப்டரின் முதல் புகைப்படத்தை அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் வெளியிட்டுள்ளது .

இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிடம் ஹெலிகொப்டர்களை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்திய கடற்படையின் பிரத்தியேக வண்ணத்துடன் அதன் முதல் புகைப்படம் வெளியாகியிருக்கிறது .

பல்திறன் வசதி கொண்ட MH60 ரோமியோ ஹெலிகொப்டர் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக இந்தியா போர்க்கருவிகளை கொள்வனவு செய்வது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.