நடிகர் ரஜினிகாந்த் முதலில் தனது கட்சியை பதிவு செய்யட்டும், அதன் பிறகு அது பற்றி பதில் கூறுகிறேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் .
சிவகங்கை மாவட்டத்தில் அரசு துறை சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து கேட்டபோது ,முதலில் கட்சியை பதிவு செய்யட்டும். அறிவிப்பை மட்டும்தானே வெளியிட்டுள்ளார். அவர் கட்சியை பதிவு செய்த பிறகு அது பற்றி பதில் தருகிறேன் என கூறியிருக்கிறார்.
கற்பனையான விடயம் தொடர்பான கேள்விகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்லமுடியாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த மூன்று வருடங்களாகவே கட்சி தொடங்குவதாக கூறி வரும் நிலையில்,தற்போது ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கின்ற நிலையில், தமிழக முதலமைச்சர் இந்த பதிலை கூறி இருக்கிறார்.
ஆகவே ரஜினிகாந்த் கட்சி தொடங்கி,பெயரை அறிவித்த பிறகுதான் அது நிஜமாகும் என்பதும் யாவரும் அறிந்த உண்மையே.
அரசியல் கட்சி தொடங்குவது உறுதி எனவும் இது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் திகதி அறிவிக்க உள்ளதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.