January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதுடில்லிக்கான பாதைகளை மூடி மாபெரும் போராட்டம்; விவசாயிகள் அறிவிப்பு

புதுடில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அகில இந்திய அளவில் கதவடைப்பு போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ள அதேவேளை,புதுடில்லிக்கான அனைத்து பாதைகளையும் முடக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 8 ம் திகதி புதுடில்லிக்கான அனைத்து நெடுஞ்சாலைகளையும் முடக்கப்போவதாகவும் மேலும் அதிகளவானவர்கள் எங்கள் போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள் என போராடும் விவசாயிகளின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளை கொடும்பாவி எரிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய விவசாய சட்டங்களை அரசாங்கம் மீளப்பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசாங்கத்தின் புதிய விவசாய சட்டங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் புதுடில்லியின் புறநகர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய விவசாய சட்டம் தாங்கள் பெருநிறுவனங்களின் தயவில் தங்கியிருக்கவேண்டிய நிலையை உருவாக்கும் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.