கேரளாவிலிருந்து 50 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் கொல்லத்தின் அருகில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் மீனவர்கள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தின் நீந்தகரா அருகே ஆழ்கடலில் 50 க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. படகுகளில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் தொலைபேசி மூலம் அவர்களை அணுக முடியவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.
சிக்கித் தவிக்கும் படகுகளைக் கண்டுபிடிக்க கடலோர காவல்படை தேடும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு சில படகுகள் நீந்தகர கரையில் இறங்கியுள்ளன.
புதிய புயல் காரணமாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னர் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிட தக்கது.