கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இந்தியா ,ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணை உலகின் அதிவேகமாக சூப்பர்சாேனிக் ஏவுகணை என கூறப்படுகிறது.
ஒரு கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணை INS RANVIJAY கப்பலில் இருந்து செலுத்தி கடற்படை பரிசோதித்துள்ளது.
300 கிலோமீட்டர் தாக்குதல் இலக்கை கொண்ட அந்த ஏவுகணை வங்காள விரிகுடா கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய கப்பல் ஒன்றை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரி நாட்டுக் கப்பல்கள் எல்லை மீறி வரும்போது தாக்கி அழிக்கும் வகையில் இந்த பிரமோஸ் சூப்பர்சாேனிக் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது . அண்மைக்காலமாக இந்தியா தாக்கி அழிக்கும் சக்தி மிக்க ஏவுகணைகள் உள்ளிட்ட பல போர்க் கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்தி வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.