January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காஷ்மீர் விவகாரம்;இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிற்கு இந்தியா கண்டனம்

photo/Organisation of Islamic Cooperation/facebook

ஜம்மு காஷ்மீர் குறித்து தேவையற்ற தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகள்  கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நிஜரில் நடைபெற்றுள்ளது.
அதில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனவும் அந்த அமைப்புக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லாத இஸ்லாமிய நாடுகள்  கூட்டமைப்பு, இது போன்ற அத்துமீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை  நிறுத்திக்கொள்ள வேண்டும் என  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  கண்டித்துள்ளது.