இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு இறங்கியுள்ளது.
அதில் பிரதமர் மோடியின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாகவும், எதிரிகள் யாரும் நெருங்காத வகையிலும் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர்.
பிரதமரின் பாதுகாப்பிற்காக ட்ரோன்-எதிர்ப்பு கட்டமைப்பை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ உருவாக்கியுள்ளது.
இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடியின் வீடு மற்றும் கார் தொடரணியில் இந்த ட்ரோன் அமைப்பு பொருத்தப்படவுள்ளது.
இந்த அமைப்பில் உள்ள ரேடார் வசதியின் மூலம் பிரதமர் இருக்கும் இடத்தில் இருந்து 2-3 கி.மீ வரை எந்தவொரு ட்ரோன்களும் அவரை நெருங்க முடியாதென கூறப்படுகிறது.
ஏதாவது ட்ரோன்கள் பிரதமர் இருக்கும் இடத்தை நோக்கி வரும் போது இந்த கட்டமைப்பு அவற்றின் தொலைத் தொடர்பை செயலிழக்க செய்கிறது. அதேநேரம் பாதுகாப்பு படையினருக்கும் இந்த ட்ரோன் தகவலை தெரிவித்து விடும் எனவும் இந்திய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.