January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகலா விடுதலை குறித்த புதிய தகவலால் தமிழக அரசியலில் சலசலப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வரும் டிசம்பர் 3 ஆம் திகதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவலாக தமிழ்நாட்டில் உலா வருகிறது.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5 ஆம் திகதி அவரது சமாதியில் சசிகலா அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது .

சில வாரங்களுக்கு முன்பு சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 10 .10 கோடி அபராதத் தொகையை செலுத்தியபோது அவர் விடுதலையாக வாய்ப்பிருந்ததாகவும் ஆனால் அவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி விடுதலையாக விரும்பியதாக நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக ,பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் சசிகலாவின் வருகையால் அதிமுகவில் ஏதேனும் தாக்கங்கள் உருவாகுமா? என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான செய்தியாக இருக்கிறது.

சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட போது அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதலை ஆவார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அபராதத் தொகையை கட்டிய சசிகலா விரைவில் விடுதலையாகலாம் என தகவல்கள் பரவின.வரும் வாரத்தில் விடுதலை குறித்த எழுத்துபூர்வமான உத்தரவு கிடைக்குமென எதிர்பார்த்திருப்பதாக அவரின் நலன்விரும்பிகள் கூறியுள்ளனர்.