பேரறிவாளனிற்கான தற்காலிக சிறை விடுவிப்பை உச்சநீதிமன்றம் மேலும் ஒரு வாரகாலத்திற்கு நீடித்துள்ளது.ஏற்கனவே பேரறிவாளனிற்கான தற்காலிக சிறை விடுவிப்பை நீடித்திருந்த நிலையிலேயே மீண்டும் நீதிமன்றம் தற்காலிக சிறை விடுவிப்பை நீடித்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பேரறிவாளன் அவதிப்பட்டு வருகிறார். எனவே கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அவருக்கு 90 நாட்கள் தற்காலிக சிறைவிடுவிப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் 30 நாட்கள் மட்டும் தற்காலிக சிறைவிடுவிப்பு வழங்கி உத்தரவிட்டது.இந்த தற்காலிக சிறைவிடுவிப்பு கடந்த நவம்பர் 9ஆம் திகதி முடிவடைய இருந்தது. இதற்கிடையில் பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் தற்காலிக சிறைவிடுவிப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் அற்புதம்மாள் மனு செய்திருந்தார்.
அதில் பேரறிவாளனுக்கு உடல்நலக் குறைவால் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவரது தந்தைக்கும் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்
இந்த மனுவை விசாரித்துள்ள நீதிமன்றம் மூன்று தடவைகள் சிறை விடுவிப்பை நீடித்துள்ளது.