January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழக அரசியல் தலைவர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்த நாளை இந்தியாவில் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

நேற்றையதினம்  உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அந்தவகையில், தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், தனது கட்சியினருடனும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கட்சி நிர்வாகிகளுடனும் கேக் வெட்டி கொண்டாடினர்.

மேலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிரபாகரன் பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரமாண்டமான கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார்.

அத்தோடு தமிழகத்தில் நிவர் புயலுக்கு மத்தியிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.