
தோல்வி பயம் காரணமாகவே திமுகவினர் தேர்தல் குறித்து அறிவிப்பதற்கு முன்னரே பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் திமுகவின் அடுத்த கட்ட தலைவர்களை நம்பாமல் தனது மகனையே பிரச்சாரத்துக்கு அனுப்பியுள்ளது, அவரிடம் தொண்டர் பலம் இல்லை என்பதைக் காட்டுவதாக உள்ளது என விமர்சித்துள்ளார்.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.