
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார்.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவசி, சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில், நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்திருந்த தவசி அதில் கூறும் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற வசனத்தின் மூலம் பிரபலமடைந்திருந்தார்.
பாரதிராஜாவின் ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், கடா மீசையுடன் பல படங்களில் நடித்து வந்தார்.
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்த நிலையில் இருக்கும் வீடியோ கடந்த வாரத்தில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை தவசி காலமாகிய செய்தி ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.